மகா சக்தி நாகாத்தம்மன் கோவிலில் சதசண்டி மகாயாகம்
மகா சக்தி நாகாத்தம்மன் கோவிலில் சதசண்டி மகாயாகம் நடந்தது.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா ஸ்ரீ கண்டிநத்தம் கிராமத்தில் உள்ள மகாசக்தி நாகாத்தம்மன் கோவிலில் உலக நன்மைக்காக லட்சார்ச்சனை மற்றும் சத சண்டிமகாயாகம் நடைபெற்றது. முன்னதாக மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்ட யாக பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து லட்சார்ச்சனை, சத சண்டியாகம், கோபூஜை நடந்தது. பின்னர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்று, நாகாத்தம்மனுக்கு சத சண்டியாக கலசாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் விரதம் இருந்து கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அன்னை மகாசக்தி நாகாத்தம்மன் அறக்கட்டளை மேனேஜிங் டிரஸ்டி ராமமூர்த்தி சுவாமிகள் மற்றும் குடும்பத்தினர் செய்து இருந்தனர்.