ஏகவுரி அம்மன், மாரியம்மன் வீதியுலா
ஏகவுரி அம்மன், மாரியம்மன் வீதியுலா நடந்தது.;
அய்யம்பேட்டை அருகே பட்டுக்குடி கிராமத்தில் அருள் பாலித்து வரும் காவல் தெய்வங்களான ஏகவுரியம்மன், மாரியம்மன், காளியம்மன், செங்கமலை ஆண்டவர் மற்றும் இதர காவல் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதையொட்டி ஏகவுரி அம்மன், மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில், வாண வேடிக்கையுடன் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம நாட்டாண்மைகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.