அன்ன வாகனத்தில் மகாமாரியம்மன் வீதி உலா

அன்ன வாகனத்தில் மகாமாரியம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-01-18 18:45 GMT

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்திப்பெற்ற சக்தி தலமான இங்கு, ஆண்டுதோறும் பங்குனி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை பாடைக்காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். அதேபோன்று ஆவணி ஞாயிறு உள்ளிட்ட அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்து வருகின்றனர். பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் காணும் பொங்கலை முன்னிட்டு வெள்ளி அன்ன வாகனத்தில் மகாமாரியம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரமேஷ், ஆய்வாளர் ரமணி, மேலாளர் சீனிவாசன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்