சாம்பசிவநாதர் கோவிலில் கலசாபிஷேகம்
சாம்பசிவநாதர் கோவிலில் கலசாபிஷேகம் நடந்தது.
குடவாசல்:-
குடவாசல் அருகே மூலங்குடியில் சர்வ சக்தி பீட சமேத சாம்பசிவ நாதர் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி கலசாபிஷேகம் நடந்தது. இதில் இமயமலை முதல் கன்னியாகுமரி வரை உள்ள புண்ணிய நதிகளில் இருந்து 108 கலசங்களில் எடுத்துவரப்பட்ட தீர்த்தங்களை ஊர்வலமாக எடுத்து வந்து சாம்பசிவ நாதருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் சிவயோகசித்தர் குடவாசல் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.