கிருஷ்ணகிரி பழையபேட்டைலட்சுமி நரசிம்மசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா

Update: 2023-05-28 19:00 GMT

கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் 37-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 26-ந் தேதி தொடங்கி ஜூன் 8-ந் தேதி வரை வெகு விமரிசையாக நடக்கிறது. இதையொட்டி கடந்த 26-ந் மாலை அங்குராற்பணம் நடந்தது. 27-ந் தேதி காலை கலச ஸ்தாபனம், யாகசாலை பிரவேசம், பிரகார உற்சவம், இரவு அன்னபட்சி வாகனத்தில் நரசிம்மர் நகர் வலமும் நடைபெற்றன. நேற்று காலை 6 மணிக்கு அபிஷேகம், பிரகார உற்சவமும், பகல் 12 மணிக்கு அன்னதானமும், இரவு சிம்ம வாகனத்தில் நரசிம்மர் நகர் வலமும் நடைபெற்றன.

தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) காலை அபிஷேகம், பிரகார உற்சவமும், இரவு ஆஞ்சநேயர் வாகனத்தில் நரசிம்மர் நகர்வலமும் நடக்கிறது. தொடர்ந்து அபிஷேகம், பிரகார உற்சவமும், இரவில் சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், சந்திரபிரபா வாகனம், புஷ்ப பல்லக்கு நடக்கிறது. 31-ந் தேதி பகல் 10.30 மணிக்கு நரசிம்மருக்கு திருக்கல்யாணமும், 11.30 மணிக்கு மாங்கல்யதாரணமும், அன்னதானமும், இரவு கருட வாகனத்தில் நகர்வலமும் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்