ராமநவமியையொட்டி கோதண்டராமர் கோவிலில் சிறப்பு பூஜை

Update: 2023-04-02 18:45 GMT

ஓசூர்:

ஓசூர் போஸ் பஜாரில் சீதா, லட்சுமண சமேத கோதண்டராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராம நவமி உற்சவங்கள் நடந்து வருகிறது. நேற்று ராமநவமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும் சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் சாமி சேஷ வாகனத்தில் திருவீதி உலா சென்றார். இன்று (திங்கட்கிழமை) சந்திர மண்டல உற்சவமும், நாளை (செவ்வாய்க்கிழமை) திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்