நல்லம்பள்ளி அருகே முருகன் கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை - தாசில்தார் தலைமையில் நடந்தது

Update: 2022-12-19 18:45 GMT

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே சாமிசெட்டிப்பட்டி கிராமத்தில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே பிரச்சினை இருந்து வந்தது. இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, முருகன் கோவிலை ஒரு சமூக மக்கள் நிர்வகிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து கோவிலை நிர்வகிப்பது குறித்த பேச்சுவார்த்தை நல்லம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் இரு சமூகத்தை சேர்ந்த பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது கோர்ட்டு உத்தரவை சுட்டிக்காட்டி, கோவிலில் அனைத்து தரப்பினரும் வழிபடலாம் என்றும், கோர்ட்டு கூறியுள்ள சமூகத்தினர் நிர்வகிக்கலாம் என்றும் தாசில்தார் கூறினார். இதனை இரு சமூகத்தினரும் ஏற்று கொண்டனர். இதனால் பல ஆண்டுகளாக நீடித்து வந்த கோவில் பிரச்சினை முடிவுக்கு வந்தது. இந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., தொப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் யமுனா தேவி, சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்