டிராக்டர்களில் பேட்டரி திருடிய வாலிபர்கள்

நெல்லை அருகே டிராக்டர்களில் பேட்டரியை வாலிபர்கள் திருடிச் சென்றனர்.

Update: 2023-02-10 19:11 GMT

நெல்லை அருகே தேவர்குளம் மேல இலந்தைகுளத்தைச் சேர்ந்தவர் கருணாகரன் (வயது 55). பெட்டிக்கடைக்காரரான இவர் விவசாயமும் செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தோட்டத்தின் அருகில் 2 டிராக்டர்களை நிறுத்தி இருந்தார். அப்போது அந்த டிராக்டர்களில் இருந்த சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 5 பேட்டரிகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கயத்தாறு வட்டார பகுதிகளில் வாகனங்களில் பேட்டரிகள் திருடியதாக அய்யனாரூத்து பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த அக்ரி கணேஷ்குமார் (21), அம்மன்கோவில் தெருவை சேர்ந்த கணபதி (23) ஆகிய 2 பேரை கயத்தாறு போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் கருணாகரனின் டிராக்டர்களிலும் பேட்டரிகள் திருடியது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்