பாட்டியிடம் முத்தம் கேட்டு டார்ச்சர் செய்த வாலிபர் ; பாட்டி மருத்துவமனையில் அனுமதி
மூதாட்டியிடம் முத்தம் கேட்ட சம்பவத்தில் வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
சேலம்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள மோரூர் பகுதியைச் சேர்ந்தவர் மாதையன். கூலித் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் மதுபோதையில் இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த சாந்தா என்ற மூதாட்டியிடம் முத்தம் கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி, அவரிடம் சண்டை போட்டுள்ளார். ஆனால், கேட்டது கிடைக்காத விரக்தியில் மதுபோதையில் இருந்த மாதையன் அருகில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்து மூதாட்டியை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனால் கூச்சலிட்ட மூதாட்டியைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டனர். தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள தீவட்டிப்பட்டி காவல்துறையினர் மாதையனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தான் முழு போதையில் இருந்ததால் தவறாக நடந்து கொண்டதாகவும் தன்னை மன்னித்து விடுமாறும் மாதையன் கேட்டுள்ளார்.
ஆனால், மாதையன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.