விபத்தில் வாலிபர் படுகாயம்
கருங்கல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் படுகாயமடைந்தார்.
கருங்கல்:
கருங்கல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் படுகாயமடைந்தார்.
கருங்கல் அருகே உள்ள எட்டணி பகுதியை சேர்ந்த சிவகுமார். இவருடைய மகன் நியூட்டன் (வயது 17). இவர் தனது நண்பரான கஞ்சிக்குழி பகுதியைச் சேர்ந்த எட்வின் ஜெயராஜ் மகன் எட்வின் ஏசுதாஸ் (17) என்பவருடன் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் கருங்கல் குளச்சல் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது வெள்ளியாவிளை பகுதியில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தின் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் பின் இருந்த எட்வின் ஏசுதாஸ் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் கருங்கல் போலீசார் வழக்கு்பபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.