மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலி

திருவையாறு அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலியானார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-08-14 02:57 IST

திருவையாறு:

திருவையாறு அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலியானார். இதுதொடர்பான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழங்கள் வாங்க வந்தார்

அரியலூர் மாவட்டம், திருமானூர் புதுத்தெருவை சேர்ந்தவர் அன்பு (வயது50).இவர் திருமானூரில் பழக்கடை வைத்துள்ளார். இவர் திருவையாறு மார்க்கெட்க்கு வந்து பழங்களை வாங்கிகொண்டு அதை எடுத்து செல்வதற்காக தனது மகன் தமிழரசனை(19) திருவையாறுக்கு வருமாறு அழைத்துள்ளார். இதை தொடர்ந்து திருமானூரில் இருந்து தமிழரசன் மோட்டார் -சைக்கிளில் திருவையாறு புறப்பட்டுள்ளார்.

பஸ் மோதி வாலிபர் பலி

திருவையாறு கஸ்தூரிபாய் நகர் அருகே வந்த போது தஞ்சையில் இருந்து திருவையாறு வழியாக திருமானூர் சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த தமிழரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, சப-்இன்ஸ்பெக்டர் வேலாயுதம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தமிழரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

மேலும் இதுதொடர்பான புகாரின் பேரில் திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்