வாகனம் மோதி வாலிபர் சாவு

சிவகிரி அருகே வாகனம் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-07-07 14:52 GMT

சிவகிரி:

சிவகிரி அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் யாதவர் தெற்கு தெருவை சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் கந்தசாமி (வயது 26). இவர் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். அதன் பின்னர் சிவகிரி அருகே சங்கனாப்பேரியில் கோழிப்பண்ணையில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவில் சிவகிரியில் இருந்து கோழிப்பண்ணைக்கு தனது ேமாட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். சிவகிரி அருகே உள்ள வெற்றிலை மண்டபம் பகுதியில் வந்தபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட கந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கந்தசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்