பஸ் மோதி வாலிபர் சாவு

தூசி அருகே பஸ் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-04-29 14:25 GMT

தூசி

செய்யாறு தாலுகா தூசி அருகே ஜடேரி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் (வயது 24), இவரது நண்பர் அதே கிராமம் குளத்தங்கரை தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (16).

இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் காஞ்சீபுரம் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மோரணம் அய்யங்கார் குளம் சாலையில் திருப்பனங்காடு கிராமம் அருகே எதிரே வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி விஜய் பரிதாபமாக இறந்தார். மணிகண்டன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்