பஸ் மோதி வாலிபர் பலி

மானூர் அருகே பஸ் மோதி வாலிபர் பலியானார்.

Update: 2022-09-23 20:41 GMT

மானூர்:

மானூர் அருகே உள்ள ரஸ்தாவை சேர்ந்தவர் காத்தப்ப தேவர் மகன் செல்லத்துரை (வயது 30). பேக்கரி தொழில் செய்து வந்தார். இவர் நேற்று மாலை தனது மோட்டார்சைக்கிளில் ரஸ்தாவில் இருந்து மானூரை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சும், அவரது மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் தலையில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே செல்லத்துரை இறந்தார்.

செல்லத்துரைக்கு தங்கமாரி என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். தகவல் அறிந்ததும் மானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். செல்லத்துரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்