லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி சாலையில் விழுந்த வாலிபர், லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update:2023-03-07 18:10 IST

திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே உள்ள பல்லி கிராமத்தை சேர்ந்தவர் குபேரன். இவரது மகன் பாரதி (வயது 19). இவர், வெம்பாக்கம் தாலுகா ஏழாச்சேரி கிராமம் செல்லும் வழியில் தனியார் கம்பெனி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது, முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது.

அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில், பின்னால் வந்த லாரி சக்கரத்தில் சிக்கி பாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்