காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை
மதுரையில் காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.;
மதுரை,
மதுரை ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 26). இவர் இளம்பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மேலும் அவர் தனது காதலை அந்த பெண்ணிடம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு அவர்கள் வீட்டில் திருமண ஏற்பாடு செய்தனர். அதை அறிந்த சிவகுமார் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் நள்ளிரவில் சிவகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.