வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

பாவூர்சத்திரம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-16 19:00 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே குலசேகரப்பட்டி கீழத்தெருவைச் சேர்ந்தவர் பாபநாச பெருமாள் மகன் மாணிக்க வாசகம் (வயது 21). இவர் டிப்ளமோ வரை படித்துவிட்டு, தற்போது பாவூர்சத்திரத்தில் ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். பாபநாச பெருமாள் கடந்த பிப்ரவரி மாதம் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இதனால் விரக்தியில் இருந்து வந்த மாணிக்கவாசகம் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணிக்கவாசகம் உடல் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்