பள்ளி மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

பெரம்பலூர் அருகே பள்ளி மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மேலும் அடிதடி வழக்கில் மாணவியின் தந்தை கைதானார்.

Update: 2022-08-17 18:08 GMT

பள்ளி மாணவி கர்ப்பம்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ராகவன் (வயது 20), டிராக்டர் டிரைவர். இவர் 10-ம் வகுப்பு பயிலும் ஒரு மாணவியை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த அவர்களது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஆனால் ராகவனும் அந்த பள்ளி மாணவியும் பழக்கத்தை நிறுத்தாமல் தொடர்ந்தனர்.

இந்த நிலையில் பள்ளி மாணவி கர்ப்பிணியானார். இதையடுத்து இரு குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ராகவனின் தாய் விஜயலட்சுமி தாக்கப்பட்டார்.

போக்சோ சட்டத்தில் கைது

இதனிடையே மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராகவனை கைது செய்தனர். பின்னர் அவர் பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், கோர்ட்டின் உத்தரவின்படி பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி மருத்துவ பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்று குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர்.

மேலும் அடிதடி சம்பவம் தொடர்பாக விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தந்தையை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்