ரெயிலில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது

ரெயிலில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-07 18:54 GMT

வாணியம்பாடி

ரெயிலில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வாணியம்பாடி-ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே கேரள மாநிலம் ஆலப்புழா வரை செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் சேலம் ரெயில்வே உட்கோட்ட சிறப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் ஏட்டுகள் சங்கர், பாலசுப்பிரமணியம், கண்ணன் ஆகியோர் ரெயிலில் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுகிறதா என சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பொது பெட்டியில் பை வைக்கும் இடத்தில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்ததில் அதில் 3 சிறிய பண்டல்களில் சுமார் 750 கிராம் கஞ்சா இருந்தது. பின்னர் அந்த பெட்டியில் இருந்த ஒடிசா மாநிலம் பலாங்கீர் பகுதியை சேர்ந்த சுரேந்தர் குவானர் (வயது 25) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் பலாங்கீரில் இருந்து திருப்பூருக்கு வேலைக்குச் சென்று அங்கு கஞ்சாவை விற்பனை செய்வதாக கூறினார்.

இதனையடுத்து அவரையும், பறிமுதல் செய்யப்பட்ட 750 கிராம் கஞ்சாவையும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்

இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுரேந்தர் குவானரை கைது செய்தனர். பின்னர் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்