லாட்டரி சீட்டுகள் விற்ற வாலிபர் கைது

லாட்டரி சீட்டுகள் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-10-02 00:04 IST

புதுக்கோட்டை தனிப்படை போலீசார் ஆலங்குடியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்த ஆலங்குடி அருகே பாத்தம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சூர்யா (வயிறு 21) என்பவரை ேபாலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் கைது செய்த சூர்யாவை ஆலங்குடியில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்