திருக்கோவிலூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
திருக்கோவிலூர் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள வீரபாண்டி கிராமத்தில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக அரகண்டநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் வீரபாண்டி கிராமத்துக்கு விரைந்து சென்று கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா? என ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள வயல்வெளி பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அதேஊரை சேர்ந்த சூர்யா (வயது 19) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.