கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்

Update: 2023-07-04 19:11 GMT

ராஜபாளையம்

ராஜபாளையம்-சங்கரன்கோவில் சாலையில் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் ரோந்து செல்லும்போது அப்பகுதியில் நின்ற வாலிபர் ஒருவரை சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தனர். அப்ேபாது அவர் பையில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராம் பிரகாஷ் (வயது21) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 110 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த தெற்கு போலீசார், ராம் பிரகாஷை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்