போதை மாத்திரைகள் விற்ற வாலிபர் கைது

ஆண்டிப்பட்டியில் போதை மாத்திரைகள் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-21 19:00 GMT

ஆண்டிப்பட்டி குமாரபுரம் மயானம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக ஆண்டிப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரது பையில் அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர், ஆண்டிப்பட்டி, ஆசாரி தெருவை சேர்ந்த சந்தானமூர்த்தி (வயது 25) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்