கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
வேலூரில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வேலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாசம் மற்றும் போலீசார் சைதாப்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள தனியார் மருத்துவமனை அருகே நின்று கொண்டிருந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவர் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் லட்சுமணன் (வயது 27) என்பதும், கஞ்சா வைத்திருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.