திங்கள்சந்தையில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
திங்கள்சந்தையில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திங்கள்சந்தை,
திங்கள்சந்தையில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வாலிபர் கைது
இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் திங்கள்சந்தை ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவரிடம் 50 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நெய்யூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது19) என்பவரை கைது செய்தனர். மேலும், கஞ்சா சப்ளை செய்த சூர்யா, அருள் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.