கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
வந்தவாசியில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வந்தவாச
வந்தவாசி தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் வந்தவாசி- ஆரணி சாலையில் ரோந்து சென்றனர்.
வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் செல்லும்போது, அங்கு நின்றிருந்த வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் ஓட முயன்றார். இதையடுத்து போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், வந்தவாசியை அடுத்த கூத்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த காளிங்கராஜ் (வயது 28) என்பதும், 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிங்கராஜை கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள், கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.