கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
கூடலூரில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
கூடலூர்
கூடலூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து நகர போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் கபில்தேவ் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கோழிப்பாலம் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். இதில் அவர் 30 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த வசந்த் என்ற வித்யாசாகர் (வயது 28) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.