ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது
ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை உணவு பொருள் கடத்தல் தடுப்புபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த திரன்சுடர் (வயது 26) என்பவர் அந்த பகுதியில் 880 கிலோ ரேஷன் அரிசி கடத்தி பதுக்கியது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து, அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பகுதியை சேர்ந்த பிரதீப் என்பவரை தேடி வருகிறார்கள்.