திருநங்கையை தாக்கிய வாலிபர் கைது

கொடைரோட்டில், திருநங்கையை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-05-08 21:36 IST

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டியை சேர்ந்தவர் ஆசை ராஜா (வயது 47). இவர், கொடைரோட்டில் உள்ள தனியார் மதுபான பாரில் சப்ளையராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் பணியில் இருந்தார்.

அப்போது கொடைரோடு அருகே உள்ள மாவுத்தன்பட்டியை சேர்ந்த கார்த்திக் ராஜா (35) அங்கு வந்தார். அப்போது அவர், மதுபாரில் வாந்தி எடுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக ஆசைராஜாவுக்கும், கார்த்திக் ராஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திக் ராஜா, அங்கிருந்த நாற்காலிகளை உடைத்தார். மேலும் பீர்பாட்டிலை உடைத்து, ஆசைராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்பிறகு பாரில் இருந்து வெளியே வந்த கார்த்திக்ராஜா, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த திருநங்கை ஒருவரை அடித்து உதைத்தார். மேலும் அவரை சாலையில் உருட்டி விட்டார். இது தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில் ஆசைராஜா புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பையா வழக்குப்பதிவு செய்து கார்த்திக்ராஜாவை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்