விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-08-26 20:44 GMT

சுவாமிமலை அருகே உள்ள திருவலஞ்சுழி வடக்கு தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன். விவசாய கூலி தொழிலாளி இவரது மனைவி கீர்த்தனா (வயது 22). இவர்களுக்கு 3½ வயதில் அர்ஜுன் என்ற மகன் உள்ளான். கடந்த சில நாட்களுக்கு முன்பு புருஷோத்தமன் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் கீர்த்தனா தனது கணவருடன் கோபித்துக்கொண்டு தனது தாத்தா அம்பிகாபதி வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் அங்கு வந்த புருஷோத்தமன் தனது மகன் அர்ஜுனை மட்டும் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். தன்னை அழைத்து செல்லாமல் மகனை மட்டும் கணவர் அழைத்து சென்றதால் மனம் உடைந்த கீர்த்தனா வீட்டில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்துள்ளார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினர். இதுகுறித்து சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.




Tags:    

மேலும் செய்திகள்