தொழில்நுட்ப கோளாறு: சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்

சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;

Update: 2023-01-21 04:41 GMT

சென்னை,

சென்னையில் கூட்ட நெரிசலை குறைக்கவும், குறைவான நேரத்தில் பயணிக்கவும் ஏதுவாக அமைந்துள்ளது மெட்ரோ ரயில். சென்னையில் மெட்ரோ ரயில் விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோன்று விம்கோ நகர் - விமான நிலையம், சென்ட்ரல் - பரங்கிமலை வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்