கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் அணு உலையில் தொழில்நுட்ப கோளாறு: 220 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி ஆகிவந்த 220 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கபட்டது.;
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் இயங்கி வரும் சென்னை அணுமின் நிலையத்தில் இரண்டு அணுஉலை உள்ளது. இதில் தலா 220 மெகாவாட் வீதம் 440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ஆகிவந்தது. அதில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் முதல் அணு உலை பழுதடைந்து மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இன்று வரை அது இயங்கவில்லை.
இந்நிலையில் இயங்கி வந்த இரண்டாவது அணு உலையில் நேற்று நள்ளிரவில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது., அதிகாரிகள் சரி செய்ய முயற்சித்து முடியாததால், இன்று அதிகாலை மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி ஆகிவந்த 220 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கபட்டது.