விஜய் மக்கள் இயக்கத்தின் தொழில்நுட்பக் குழு ஆலோசனைக் கூட்டம்; 26-ந்தேதி நடைபெறும் என அறிவிப்பு
சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் தொழில்நுட்பக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.;
சென்னை,
விஜய் மக்கள் இயக்கத்தின் தொழில்நுட்பக் குழு ஆலோசனைக் கூட்டம் வரும் 26-ந்தேதி(சனிக்கிழமை) காலை மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் இளைஞர் அணி, மாணவர் அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளைச் சேர்ந்தவர்கள் விஜய் மக்கள் இயக்கத்தில் உறுப்பினர்களாக செயல்படுவது குறித்தும், செப்டம்பர் 17-ந்தேதி தந்தை பெரியார் பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் நலத்திட்ட பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் செப்டம்பர் 23-ந்தேதி நடைபெற உள்ள 'லியோ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.