ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆசிரியர் விரோத போக்கில் ஈடுபட்டு வரும் மாவட்ட கல்வி அலுவலரை கண்டித்து சிவகங்கையில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தனபாலன் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி தலைவர் சகாயராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் டேவிட் அற்புதம் வரவேற்றார். இதில், மாவட்ட செயலாளர்கள் ஜான் பீட்டர் (சிவகங்கை), லியோ ஜெரால்டு (ராமநாதபுரம்), ஜோயல் ராஜ் (மதுரை), மாநில ஒருங்கிணைப்பாளர் சத்தியேந்திரன், கூட்டணியின் முன்னாள் மாநில துணை பொது செயலாளர் அருள்சாமி, மாநில பொருளாளர் பெரியசாமி, துணை தலைவர் பீட்டர் ஆரோக்கியராஜ், பொது செயலாளர் ராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் சண்முகவேல் நன்றி கூறினார்.