ஆசிரியர் இயக்க கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்

நெல்லையில் ஆசிரியர் இயக்க கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;

Update:2023-09-11 00:41 IST

தமிழ்நாடு தொடக்கக்கல்வி துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோ ஜேக் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நெல்லை வீரமாணிக்கபுரத்தில் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர்கள் ஜான் பாரதிதாசன், அமல்ராஜ், சாம் மாணிக்கராஜ், முருகேசன், காந்தி ராஜா, ராஜகுமார், உமையொருபாகம், அகஸ்டின், அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மூன்றாம் தரப்பு ஆய்வினை கைவிட வேண்டும். எண்ணும் எழுத்தும் திட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகளை நடத்துவதை கைவிட வேண்டும். மாதந்தோறும் நடத்தும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை 3 மாதங்களுக்கு ஒரு முறை நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை டவுன் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நாளை (அதாவது இன்று திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்