ஆசிரியர் காப்பாளர் சங்க கூட்டம்
ஆசிரியர் காப்பாளர் சங்க கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்க கூட்டம் திருப்பத்தூர் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் நடைபெற்றது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநில தலைவர் பாக்கியராஜ் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு தேர்தலை நடத்தினார். 2022-25-ம் ஆண்டுக்கான மாவட்ட தலைவராக பாலன், செயலாளராக பெருமாள், பொருளாளராக சிவகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.