மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ஆசிரியர் சாவு
ஆற்காடு அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்.;
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி மாருதி புரத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 52). இவர் திமிரி அடுத்த ஆனைமல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார். கடந்த 19-ந் தேதி வழக்கம்போல் மோட்டார்சைக்கிளில் பள்ளிக்கு சென்றுள்ளார். பின்னர் மாலையில் வீடு திரும்பியுள்ளார்.
ஆனைமல்லூர் அருகே வந்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு மேல்விஷாரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி ஆசிரியர் லோகநாதன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து திமிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.