டாஸ்மாக் கடைகளை குறைக்க வேண்டும்

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க டாஸ்மாக் கடைகளை குறைக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.

Update: 2023-04-10 16:53 GMT

குடியாத்தத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வரவேற்பு

ஆன்லைன் ரம்மிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிற மசோதாவிற்கு தமிழ்நாடு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். ஆன்லைன் ரம்மியால் ஏழை, நடுத்தர மக்கள் தங்கள் சொத்துக்களை இழந்து உயிரையும் இழந்துள்ளனர். இதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று த.மா.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வந்தன.

டெல்டா மாவட்டத்தை பொறுத்தவரையில் அங்கு மத்திய மாநில அரசுகள் விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டங்களையும் ஏற்படுத்தக் கூடாது. பிரதமரின் தமிழக வருகை என்பது, மத்திய அரசுக்குத் தமிழகத்தின் மீது உள்ள அக்கறையை காட்டுகிறது. சென்னை விமான நிலைய விரிவாக்கம், வந்தே பாரத் ெரயில் திட்டம், சாலை விரிவாக்கம், திருத்துறைப்பூண்டி ெரயில்வே திட்டம் போன்றவை தமிழகத்தின் வளர்ச்சிக்கானதாக இருக்கும்.

வாக்குறுதியை நிறைவேற்றாத அரசு

குடியாத்தம் நகரின் பிரதான தொழிலான நெசவுத் தொழிலை மேம்படுத்த கைத்தறி பூங்கா அவசியம் தேவை. குடியாத்தம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுற்றுச்சாலை தேவை என்று மாவட்ட த.மா.கா. சார்பில் அரசுக்கு விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து பா.ம.க., அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் த.மா.கா. உள்ளது. தி.மு.க.விற்கு வாக்களித்த மக்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாத அரசாகவே இருந்து வருகிறது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றால் டாஸ்மாக் கடைகளை குறைக்க வேண்டும். கஞ்சா பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநில செயற்குழு உறுப்பினர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், மாவட்ட தலைவர் எஸ்.அருணோதயம், வேலூர் மாநகர தலைவர் மூர்த்தி, செயலாளர் தேசபக்தன், மாவட்ட பொருளாளர் பாபு, குடியாத்தம் நிர்வாகிகள் கார்த்தி, ஜலேந்திரன், தினகரன் உள்ளிட்டார் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்