டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்
சங்கரன்கோவிலில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
சங்கரன்கோவில்:
வன்னிக்கோனேந்தலில் டாஸ்மாக் கடையில் புகுந்து 2 ஊழியர்களை தாக்கிய சம்பவத்தை கண்டித்தும், மர்மநபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், ஊழியர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்க கோரியும் சங்கரன்கோவிலில் டாஸ்மாக் கடையை அடைத்து கடை முன் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். டாஸ்மாக் சங்க தென்காசி மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகவேல் முன்னிலை வகித்தார். இதில் அ.ம.மு.க. தொழிற்சங்க நிர்வாகிகள் முருகராஜ், பொன் முத்துராமலிங்கம், டாஸ்மாக் சங்க நிர்வாகி ராமர் பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் சங்கரன்கோவிலில் இயங்கி வந்த 4 டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டது. ஊழியர்களின் திடீர் கடை அடைப்பு போராட்டத்தால் மதுப்பிரியர்கள் கடும் அவதிப்பட்டனர்.