முன்பு இருந்த தஞ்சை இப்போது இல்லை; மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது

முன்பு இருந்த தஞ்சை இப்போது இல்லை; மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது

Update: 2022-09-01 20:01 GMT

முன்பு இருந்த தஞ்சை இப்போது இல்லை. மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. தொடர்ந்து மக்களுக்கான பணிகளை மேற்கொள்ளுங்கள் என்று தஞ்சை மாநகராட்சி மேயர், ஆணையரை சந்தித்து நடிகர் பிரபு பாராட்டு தெரிவித்தார்.

நடிகர் பிரபு வருகை

தஞ்சையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர் பிரபு, தனது மனைவி புனிதாவுடன் நேற்று வந்தார். பின்னர் அவர் திடீரென தஞ்சை மாநகராட்சி அலுவலகத்துக்கு காரில் வந்தார்.அவரை மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், ஆணையர் சரவணகுமார், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். நடிகர் பிரபும் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தினார்.

மிகப்பெரிய வளர்ச்சி

பின்னர் நடிகர் பிரபு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் பிரபு கூறுகையில், தஞ்சை மாநகராட்சி முன்பு இருந்ததைப்போல இல்லை. தற்போது மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. தொடர்ந்து பல்வேறு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது.

பாராட்டு

இதற்காக மேயர், ஆணையர் மற்றும் அதிகாரிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து மக்களுக்கான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளுங்கள். மேலும் தஞ்சை மணிமண்டபம் அருகே உள்ள எனது தந்தை சிவாஜியின் சிலை அமைந்துள்ள பகுதியில் மாநகராட்சி சார்பில் மின் விளக்கு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன், சிறப்பாக பராமரித்து வருவதற்கும் மாநகராட்சிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

அப்போது மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், சோழமண்டல சிவாஜி பாசறை தலைவர் சதா.வெங்கட்ராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்