தஞ்சை-ஹூப்ளி இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

தஞ்சை-ஹூப்ளி இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-04-27 20:27 GMT

ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ரெயில்வே நிர்வாகம் சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து சேலம், கரூர், திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு கடந்த மார்ச் மாதம் முதல் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் மேலும் ஒரு மாதம் (மே) நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஹூப்ளி-தஞ்சாவூர் சிறப்பு ரெயில் (வண்டி எண்:07325) வருகிற 1, 8, 15, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் திங்கட்கிழமை தோறும் ஹூப்ளி ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், கரூர் வழியாக மறுநாள் பகல் 12.40 மணிக்கு திருச்சி வந்தடையும். இங்கிருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.

இதேபோல் மறுமார்க்கத்தில் தஞ்சாவூர்-ஹூப்ளி சிறப்பு ரெயில் (வண்டி எண்:07326) வருகிற 2, 9, 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் செவ்வாய்க்கிழமை தோறும் தஞ்சாவூரில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு இரவு 8.40 மணிக்கு வந்தடையும். பின்னர் இங்கிருந்து இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு கரூர், சேலம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு வழியாக மறுநாள் மதியம் 12.30 மணிக்கு ஹூப்ளி சென்றடையும். இந்த தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்