நெடுந்தீவு அருகே எல்லை கடந்து சென்று மீன் பிடித்த தமிழக மீனவர்கள் கைது
நெடுந்தீவு அருகே எல்லை கடந்து சென்று மீன் பிடித்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து உள்ளது.;
நெடுந்தீவு,
இலங்கை யாழ்ப்பாணம் பகுதியையொட்டிய நெடுந்தீவு அருகே எல்லை கடந்து சென்று மீன் பிடித்தனர் என கூறி 21 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து நடவடிக்கை எடுத்து உள்ளது.
தமிழக மீனவர்கள் சென்ற 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ராமேசுவரம் பகுதியை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது. அவர்களை காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.