தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு தமிழ் புலிகள் கட்சியினர் வடக்கு மாவட்ட துணை செயலாளர் பீமாராவ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மணிப்பூர் மாநிலத்தில் பட்டியல் பழங்குடியின மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள், பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செய்தி தொடர்பாளர் கனியமுதன், இளம்புலிகள் வடக்கு மாவட்ட செயலாளர் தமிழரசு, துணை செய்தி தொடர்பாளர் மகாராஜா, எம்.எல்.கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் சங்கரன், சமூக செயல்பாட்டாளர்கள் பால்சிங், முத்துக்குமார், மாரி கண்ணன், பாலமுருகன், கண்ணரசு, அழகர், சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.