தமிழக பெண்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

தமிழக பெண்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2022-05-31 18:53 GMT

ராமேசுவர

ராமேசுவரம் வடகாடு கிராமத்தில் பாசி சேகரித்து விட்டு வந்த மீனவ பெண்ணை ஒடிசா மாநில தொழிலாளர்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தனர். இந்தநிலையில் ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் வலசை பஸ் நிறுத்தம் எதிரே நேற்று தமிழக பெண்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் தொடர்ந்து பெண்கள் மீது நடந்து வரும் பாலியல் வன்கொடுமைகளையும் தடுத்து நிறுத்தவும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கடுமையான தண்டனை வழங்கும் வகையில் கடுமையான சட்டத்தை நிறைவேற்றவும், பாதிக்கப்பட்ட மீனவ பெண்ணின் குடும்பத்திற்கு அரசு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க வலியுறுத்தியும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக பெண்கள் கூட்டமைப்பின் மண்டபம் ஒன்றிய தலைவி மோட்ச ராக்கினி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநில தலைவி ராமலட்சுமி, தங்கச்சிமடம் ஊராட்சி மன்ற தலைவி குயின்மேரி, மக்கள் அமைப்பு தலைவி இருதயமேரி, மாநில துணைத்தலைவி ராஜேஸ்வரி, நிர்வாகிகள் ஞானசௌந்தரி, கர்லோபா, விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் சேசூராஜா, எமரிட், சகாயம், ஜஸ்டின் உள்ளிட்ட ஏராளமான மீனவ பெண்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்