ஓ.பன்னீர் செல்வம் ஒப்புதல் இல்லாமல் ஒற்றை தலைமை குறித்து தீர்மானம் கொண்டு வந்தால் செல்லாது -வைத்திலிங்கம்

பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஒப்புதல் இல்லாமல் ஒற்றை தலைமை குறித்து தீர்மானம் கொண்டு வந்தால் அது செல்லாது என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-17 08:46 GMT

சென்னை

சென்னையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களுடன் 4-வது நாளாக ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், மைத்ரேயன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.இந்தநிலையில் ஓ.பன்னீர் செல்வத்தை சந்திக்க அவரது வீட்டிற்கு அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை வந்தார். அவர் நேற்று மாலை சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிட தக்கது.

ஓ.பன்னீர் செல்வத்துடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பின் வைத்திலிங்கம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கட்சி வலுவாக இருக்க வேண்டும் என்பதை குறித்து விவாதிக்கப்பட்டது. பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து போட்டுதான் தீர்மானம் கொண்டு வரமுடியும். அப்படி ஏதேனும் ஒற்றை தலைமை குறித்து தீர்மானம் கொண்டுவந்தால் அது செல்லாது.

முன்னாள் சபாநாயகர் தம்பிதுரை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினார்.ஒற்றை தலைமை குறித்த தன்னுடைய கருத்தை அவரிடம் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்து உள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்