தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சங்கரன்கோவிலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-01-08 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் வடக்கு ரத வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மண்டல செயலாளர் இன்பராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மாடசாமி வரவேற்றார். மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சண்முக சுதாகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நிறுவனர் ஜான்பாண்டியனை அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். சங்கரன்கோவிலில் ஜூலை இரண்டில் பட்டியல் வெளியேற்ற கோரிக்கை மாநில மாநாடு சிறப்பாக நடத்தப்பட வேண்டும், சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி திருக்கோவிலில் ஆடித்தவசு மண்டகப்படி தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்களுக்கு இந்து அறநிலைத்துறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் செந்தில் அரசி, மாவட்ட பொருளாளர் வெள்ளத்துரை, சங்கரன்கோவில் நகர செயலாளர் பெரியசாமி, துணைச் செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் முத்துசாமி, இன்பராஜ், பெரியதுரை, மாவட்ட இணை செயலாளர் கோபி பாண்டியன், துணைச் செயலாளர் காளி ராஜ், தொகுதி துணை செயலாளர் கனி பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்