தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வேலூரில் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-10-16 18:03 GMT

தமிழ்நாடு ஒய்வூதியர் சங்கம் வேலூர் மாவட்டம் சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் திருவெங்கடேசுவரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார், பொருளாளர் வசந்தா, தணிக்கையாளர் ராமானுஜலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் அருணகிரிநாதன், முன்னாள் மாவட்ட தலைவர் ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் மருத்துவக்காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும். மருத்துவப்படி மாதந்தோறும் ரூ.1,000 வழங்க வேண்டும். 70 வயது நிரம்பியவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்கள் எழுப்பினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்