தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் போராட்டம் தற்காலிக வாபஸ்

சேப்பாக்கத்தில் நடைபெற்று வந்த தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Update: 2023-06-27 14:26 GMT

சென்னை,

தமிழகத்தில் அரசு சார்பில் இயங்கி வரும் சத்துணவு கூடங்களில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், சென்னை சேப்பாக்கத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, அமைச்சர் கீதா ஜீவன், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை நேரில் சந்தித்தார். பின்னர், தங்களது கோரிக்கை நிரப்பப்படும் என்றும், சத்துணவு பணியாளர்களின் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் கீதாஜீவன் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் போராட்டம் தற்காலிக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.  

Full View
Tags:    

மேலும் செய்திகள்