தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சீர்காழியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் உஷா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சாந்தி, தமிழ்நாடு சாலை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் காலை சிற்றுண்டி திட்டத்தை மகளிர் சுய உதவி குழு மூலம் அமல்படுத்தாமல் அந்தந்த பள்ளியில் பணி புரியும் சத்துணவு அமைப்பாளர் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் சங்க நிர்வாகி ஜெகதா சாலட் நன்றி கூறினார்.