தமிழக சுகாதாரத்துறை அவ்வாறு அறிவிக்கவில்லை... - அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்

மருத்துவ பரிந்துரை சீட்டில் கேப்பிட்டல் எழுத்தில் எழுத வேண்டுமென தமிழக சுகாதாரத்துறை அறிவிக்கவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.;

Update:2024-02-24 10:13 IST
தமிழக சுகாதாரத்துறை அவ்வாறு அறிவிக்கவில்லை... - அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை,

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நாளை பிரதமர் மோடியால் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்படவுள்ள நலத்திட்டங்கள் குறித்து அவர் கூறினார்.

இதனிடையே, கேப்பிட்டல் (Capital) எழுத்தில் மருத்துவ பரிந்துரை சீட்டில் எழுத வேண்டுமென பரவிய தகவல் குறித்து விளக்கமளித்த அவர், அவ்வாறு தேசிய மருத்துவ கவுன்சில் அறிக்கை வெளியிட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான அந்த அறிவிப்பு சாதாரண பொது அறிவிப்பு என்றும் தமிழக சுகாதாரத்துறை அது மாதிரியான அறிவிப்பை வெளியிடவில்லை என்றும் அவர் கூறினார்.Full View

Tags:    

மேலும் செய்திகள்